வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை மார்ச் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.