fbpx

இரவில் குளிர்பானம் குடித்து விட்டு தூங்கச் சென்ற பெண் மரணம்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்திரராஜனின் மகள் சிவராமக்கனி வயது 21. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில், ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த வியாழன் அன்று இரவு முட்டை போண்டா மற்றும் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டதால் உணவு செரிமானம் ஆகாமல் இருந்துள்ளார். செரிமானம் ஆகும் என நினைத்து குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு தூங்க சென்றார். அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கிவிழுந்துள்ளார் சிவராமக்கனி. அவரை உடனடியாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உணவு செரிமாணத்திற்காக குளிர்பானம் குடித்துவிட்டு தூங்கச் சென்று பெண்ணுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

நடிகர் மாதவனுக்கு‌ மத்திய அரசு கொடுத்த புது பதவி...! FTII நிறுவனத்தின் தலைவராக நியமனம்...!

Sat Sep 2 , 2023
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) சங்கத்தின் தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் நடிகர் மாதவனை வெள்ளிக்கிழமை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நியமித்தது. முன்னாள் தலைவர் இயக்குனர் சேகர் கபூரின் பதவிக்காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்த நிலையில் தற்போது நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி […]

You May Like