fbpx

மக்களே உஷார்..! தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் தான் காற்று மாசு அதிகம்..! இதே போல் போனால் 2030-ல் 27 விழுக்காடு அதிகரிக்கும்..!

2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு என பெங்களூரு ஆய்வு மையம் தகவல்.

பெங்களுருவில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டடங்களில் வெளியேற்றப்பட்ட மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள், கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் காற்று மாசு அதிகாமாக இருப்பதாகவும், தூத்துக்குடியை காட்டிலும் சென்னையில் இரு மடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்று மாசுவை குறைக்கவிட்டால் 2030 ஆம் ஆண்டில் சென்னை திருச்சியில் அதிகபட்சமாக 27 விழுக்காடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

விஜய் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! என்ன ஆச்சு..?

Wed Aug 30 , 2023
தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவின் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். அங்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர், மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை. இதனால் மகேஷ் பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார். […]

You May Like