fbpx

மக்களே உஷார்!. விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்!. 12% மசாலா பொருட்கள் தரமற்றவை!

Spices: பிரபல நிறுவனங்களான எம்.டி.எச். மற்றும் எவரெஸ்ட் நிறுவன தயாரிப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில், 12 சதவீத மாதிரி மசாலாப் பொருட்கள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

நமது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை அரசின் ஒப்புதலுடன் தயார் செய்து வருகின்றனர். அண்மையில் எம்.டி .ஹெச் மற்றும் எவரெஸ்ட் மசாலா நிறுவனத்தை ஹாங்காங் அரசு தடை செய்ததை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் உணவு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகைகள் வலுத்தன .இந்நிலையில், நமது நாட்டில் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் மசாலா பொடிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் பல்வேறு பொருட்கள் தரமற்று இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, பல்வேறு மசாலா நிறுவனங்களில் மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சோதனையை மேற்கொண்டது . இந்த சோதனைகளில் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மசாலா பொருட்களில் 12 சதவிகிதம் விழுக்காடு தரமற்ற மசாலா பொருட்கள் இருப்பதாக மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அத்தகைய நிறுவனங்களை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Readmore: பெண்களுக்கு ரூ.6,000 கொடுக்கும் மத்திய அரசு திட்டம்…! ஆதார் கட்டாயம் இல்லை… எப்படி பெறுவது தெரியுமா…?

English Summary

People beware! Don’t be fooled by the advertisement! 12% spices are substandard!

Kokila

Next Post

ரூ.79,000 சம்பளத்தில் வேலை..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue Aug 20 , 2024
Bharat Electronics Limited, a public sector company operating under the central government, has released a notification to fill the vacant posts.

You May Like