fbpx

மக்களே உஷார்..!! சளி, காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்றவை..!! லிஸ்ட் உள்ளே..!!

காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான 59 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் 1,251 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். தரமற்ற அந்த மருந்துகளின் விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

ஓடும் ரயிலில் பயணிகளை தீவைத்து கொளுத்திய மர்ம நபர்..!! கேரளாவில் பயங்கர சம்பவம்..!!

Mon Apr 3 , 2023
கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில் வழக்கம்போல் நேற்றும் இயங்கியது. அப்போது அந்த ரயில் கோழிக்கோடு, எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவு சுமார் 9.30 மணியளவில் D1 கோச்சில் பயணம் மர்ம நபர் ஒருவர் தனது சக பயணிகள் மீது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதனால், பயணிகள் அலறி துடித்தனர். இதில் 2 […]

You May Like