fbpx

மக்களே எச்சரிக்கை!… உடல் பருமன் அதிகரிப்பும்!… அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கையும்!

இந்தியாவில் 16 பெண்களில் ஒருவருக்கும், 25 ஆண்களில் ஒருவருக்கும் உடல் பருமன் பிரச்சனை இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தேசிய குடும்ப நல ஆய்வில், ஒரு நபரின் உடல் நிறை குறியீட்டெண் ((BMI) அடிப்படையில் தான். அதாவது ஒரு நபர் 30க்கு மேல் BMI என்று சொல்லப்படக்கூடிய உடல் நிறை குறியீட்டெண் பெற்றிருந்தால், அவர் உடல் பருமனான நபராக கருதப்படுவார். இந்த விஷயத்தில் பிராந்திய வேறுபாடுகளும் BMI அளவீட்டினை ஆண், பெண் இரு பாலரிடையே வேறுபடுத்தி காட்டுகிறதாம் . இதன் அடிப்படையில் தான் சில இடங்களில், ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் பருமன் மாற்றங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் நிலவி வருவதாகவும், அது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களிடையே உடல் பருமன் பிரச்சனை அதிகமாக இருப்பதாகவும், மேலும் ஒப்பீட்டளவில் வளமான, வசதியான பெண்களிடையே இந்த சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தற்போது ”middle-aged spread” என்று சொல்லப்படக்கூடிய நடுத்தர வயது பெண்களிடத்திலேயே இது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவிலேயே அதிக உடல் பருமன் உள்ள மாநிலமான பஞ்சாபில், சுமார் 14.2 சதவீத பெண்களும், 8.3 சதவீத ஆண்களும் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர ஆந்திரப் பிரதேசத்தில், 12 சதவீத பெண்களும், 6 சதவீத ஆண்களும் இந்த உடல் பருமன் பிரச்சனையுடன் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை
பொறுத்தவரை 14.1 சதவீத பெண்களும், 8.7 சதவீத ஆண்களும் உடல் பருமனாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட NFHS இன் ஐந்தாவது சுற்றின் அறிக்கையின் படி, 15-49 வயதுடைய பெண்களில் 6.4 சதவீதமும், ஆண்களில் 4.0 சதவீதமும் உடல் பருமனாக இருக்கிறார்கள். மேலும் அதே வயதில் உள்ள 17.6 சதவீத பெண்களும் 18.9 சதவீத ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக, அதாவது பருமனாக இல்லாமல் உடல் அதிக எடை கொண்ட நபர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

காதலிக்கு பரிசு வாங்க பணம் இல்லை!… ஆடு திருடிய கல்லூரி மாணவர்கள்!… விழுப்புரத்தில் அதிர்ச்சி!

Mon Feb 13 , 2023
விழுப்புரத்தில் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவர்கள் இருவர் ஆடு திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்ரேணுகா. இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். திடீரென நேற்று ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு இளைஞர்கள் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா, […]

You May Like