fbpx

மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

செல்போனை சிம் கார்டுடன் சர்வீஸ் செய்ய கொடுத்துச் சென்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார். அந்த கடையில் இருந்தவர் மறுநாள் செல்போனை பழுது நீக்கி கொடுப்பதாகவும், செல்போனை சிம் கார்டுடன் கொடுத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார். அதன்படி, கதமும் தனது செல்போனை சிம் கார்டுடன் கடையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

கடைக்காரர் கூறியபடி மறுநாள் செல்போனை வாங்க அதே கடைக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் தனது வங்கிக் கணக்கை எதேச்சையாக சோதனை செய்தபோது தனது செல்போன் எண்ணை வைத்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கதம், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கதமின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.2 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கணவனால் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்..!! போலீசுக்கு சென்ற கால்..!! உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!!

Tue Oct 25 , 2022
உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் […]

You May Like