fbpx

மக்களே உஷார்!…. விஷமாகும் சுரைக்காய்?… ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும் என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. சுரைக்காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், சுரைக்காயில், நச்சுத்தன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. சுரைக்காயில் உள்ள குக்குர்பிடசின்கள் எனப்படும் நச்சு டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இது தாவரணி உன்னி விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சுரைக்காயில் இருந்து சுரக்கப்படும் நச்சுத்தன்மையாகும்.

சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும் என்றும் கசப்பான சுவை கொண்ட சுரைக்காய் சாறு உடலில் நச்சு எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது என்றும் இதனால், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக்கசிவு, இரத்த சோகை, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

50-300 மில்லி வரம்பை விட குக்குர்பிடாசின் உள்ள சுரைக்காயை உட்கொண்டால், இரைப்பை குடல் ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை கடுமையாக்கலாம் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும், கசப்பான சுரைக்காய் சாற்றில் நச்சுத்தன்மை சயனைடு அளவுக்கு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Kokila

Next Post

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளா நீங்கள்?... இதை கட்டாயம் பின்பற்றுங்கள்!

Thu Feb 9 , 2023
வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில், அதிக […]

You May Like