fbpx

மக்களே எச்சரிக்கை!… ஏடிஎம், கடைகள், உணவகங்களில் கொடுக்கப்படும் Bill ரசீதுகளில் நச்சுத்தன்மை!… ஷாக் ரிப்போர்ட்!

ஏடிஎம்கள்,மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து கொடுக்கப்படும் அச்சிடப்பட்ட ரசீதுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்காக பணியாற்றும் அமெரிக்க இலாப நோக்கற்ற சூழலியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மளிகைக் கடைகள், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் உணவகங்களில் நீங்கள் பெறும் ரசீதுகளில் பிஸ்பெனால் ஏ அல்லது பிபிஏ போன்ற “நச்சு இரசாயனங்கள்” (toxic chemicals) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரசீது தாள்களில் அதிக செறிவு கொண்ட பிஸ்பெனால்கள் (நச்சு இரசாயனங்கள்) உள்ளன.

குறிப்பாக, பிஸ்பெனால் ஏ (பிபிஏ) மற்றும் பிஸ்பெனால் எஸ் (பிபிஎஸ்) ஆகியவை குழந்தை பெறுவதற்கு (இனப்பெருக்கத்திற்கு) தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 22 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் உள்ள 144 பெரிய கடைகளில் இருந்து 374 ரசீதுகளை சோதனை செய்யப்பட்டதாகவும், மளிகைக் கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்து கடைகள் மற்றும் எரிவாயு நிலையங்களில் பொதுவாக காணப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

80 சதவீத ரசீதுகளில் பிஸ்பெனால் (பிபிஎஸ் அல்லது பிபிஏ) இருப்பதை கண்டறிந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ரசீதுகள் என்பது ஹார்மோன்களை சீர்குலைக்கும் பிஸ்பெனால்களுக்கான பொதுவான வெளிப்பாடு பாதையாகும், இது தோல் வழியாக உடனடியாக உறிஞ்சப்படுகிறது. பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் பிஸ்பெனால் பூசப்பட்ட ரசீது காகிதத்தைப் பயன்படுத்துவதாக எங்கள் ஆய்வுகள் தெரியவந்தது என்று சூழலியல் மையத்தின் சுற்றுச்சூழல் சுகாதார வழக்கறிஞர் மெலிசா கூப்பர் சார்ஜென்ட் தெரிவித்தார்.

BPS ஆனது BPA இரண்டும் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆபத்தை விளைக்கும் என்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் நுகர்வோருக்கு ரசாயனம் தடவிய காகிதத்தை வழங்குவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வேடிக்கையான கேப்சன் பதிவு!... 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பகிர்ந்த விராட் கோலி!... வைரலாகும் மதிப்பெண் சான்றிதழ்!...

Fri Mar 31 , 2023
விராட் கோலி தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் “கிங் கோலி” என்றும் விராட் கோலி செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என […]

You May Like