fbpx

மக்களே உஷார்..!! அதி கனமழை..!! 3 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”நேற்று வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மக்களே உஷார்..!! அதி கனமழை..!! 3 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

நாளை முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்யக்கூடும்.

Chella

Next Post

மதுரை பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து … 5 பேர் பலி !!

Thu Nov 10 , 2022
பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவரின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இவருக்கு சொந்தமாக இரண்டு குடோன்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பட்டாசுகள் எல்லாம் படபடவென வெடித்து சிதறியது. தீவிபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் குடோனில் இருந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி […]
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை தீவைத்து கொன்ற பேரன்..!! பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!!

You May Like