fbpx

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், இளைய தலைமுறையினர் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. தங்களுடைய கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரியில் 12.8.2022-க்குள் தெரிவிக்கலாம்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு

ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க, 9.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். கருத்துக் கேட்புக் கூட்டம் 11.8.2022 அன்று மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம்”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இனி அனைவருக்கும் குடும்ப சுகாதார அட்டை’..! வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Sun Aug 7 , 2022
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும். ’மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக […]
’இனி அனைவருக்கும் குடும்ப சுகாதார அட்டை’..! வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

You May Like