fbpx

மக்களே..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டுக் கொள்ளும்படி ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை விடுமுறைகள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும்.

அந்த வகையில், தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களையும் சேர்த்து மொத்தமாக 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்

நவம்பர் 1ஆம் தேதி – கன்னட ராஜ்யோச்சவம், கட், கர்வா சவுத் காரணமாக பெங்களூரு, இம்பால் மற்றும் சிம்லாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நவம்பர் 5ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 10ஆம் தேதிவாங்கலா திருவிழா காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 11ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 12ஆம் தேதி – தீபாவளி பண்டிகை

நவம்பர் 13ஆம் தேதி – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி காரணமாக அகர்தலா, டேராடூன், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், இம்பால்மற்றும் லக்னோவில் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 14ஆம் தேதி – தீபாவளி (பலி பிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, லக்ஷ்மி பூஜை காரணமாக அஹமதாபாத், பெலாபூர், பெங்களூர், கேங்டாக், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 15ஆம் தேதி – பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, நிங்கால் சக்குபா / ப்ரத்ரி துவிதியா காரணமாக கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 19ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 20ஆம் தேதி – சாத் பூஜையால் பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 23ஆம் தேதி – செங் குட் ஸ்னெம் காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 25ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 27ஆம் தேதி – குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி காரணமாக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 30ஆம் தேதி – கனகதாச ஜெயந்தி காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Chella

Next Post

தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணத்தொகை!… முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Sat Oct 28 , 2023
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக […]

You May Like