fbpx

மக்களே யாரும் வெளியில் வராதீங்க..!! ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகளுக்கும் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பெற்றோர்களே..!! அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!! வெளியான அறிவிப்பு..!!

Mon Apr 17 , 2023
பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்க உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், […]

You May Like