fbpx

மக்களே மறந்துறாதீங்க..!! இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்களை மனை பிரிவுகள், கட்டிடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சார்ந்த முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கிராம ஊராட்சிகள் மக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக் கூடாது என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி வீடு, சொத்து மற்றும் குடிநீராகிய வரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். மேலும், புதிய கட்டடங்களுக்கு அனுமதியும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தொடர் சரிவில் தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இன்றைய நிலவரம் இதுதான்..!!

Mon May 22 , 2023
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]

You May Like