fbpx

மக்களே குடையை மறந்துறாதீங்க..!! இன்னைக்கு 12 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! அலெர்ட்..!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரைவிட, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கருர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

2024?... ஆபத்தில் உலக நாடுகள்!… பயங்கரவாத தாக்குதல் முதல் ரஷ்ய அதிபர் புதின் உயிர் வரை!… பாபா வங்கா கணிப்புகள்!

Mon Nov 6 , 2023
பயங்கரவாத தாக்குதல் முதல் இயற்கை பேரழிவு வரை 2024ம் ஆண்டில் நிகழும் என்ற அதிர்ச்சிக்கரமான நிகழ்வுகள் குறித்து பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கேரிய பெண்ணான பாபா வாங்கா 1996இல் தனது 75 வயதில் உயரிழந்தார். ஆனால் அவரது பல கணிப்புகள் அவரது மரணத்திற்குப் பிறகு உண்மையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உண்மையான பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா. ஒரு பெரிய புயலின் போது 12 வயதில் மர்மமான முறையில் […]

You May Like