தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அதன்படி இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு மாவட்டங்களுக்கும் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழை
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் மார்ச் 18ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Read More : யார் அந்த சார்..? ஞானசேகரன் செல்போனில் யாரிடம் பேசினார்..? குற்றப்பத்திரிகையில் வெளியான பரபரப்பு தகவல்..!!