fbpx

மக்களே..!! நாளைக்கு அந்தப் பக்கம் போகாதீங்க..!! விடுமுறை விட்டாச்சு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் ரேஷன் கடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 18) ரேஷன் கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

Chella

Next Post

கொரோனாவை தொடர்ந்து நிஃபா..!! மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!!

Sun Sep 17 , 2023
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசிகள் வாங்கப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கு பாதிப்பு உறுதி […]

You May Like