fbpx

மக்களே..!! குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்துறாதீங்க..!! ஒருமுறையாவது சென்று இதை பண்ணுங்க..!!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் என்றால், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், மீண்டும் தொடங்கலாம்.

சாதரணமாக கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து வருவீர்கள். ஆனால், குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கிறது. நமது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும்.

எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.

தங்கள் குடும்பத்துக்கும், உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது வளமையான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். குலதெய்வ வழிபாடில்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை. எனவே, இவ்வழிபாடு எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர்.

எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்கு நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளை துவக்குவதும் நாம் கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது. குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. மேலும், குல தெய்வ சாபம் வம்சத்தை சீரழிக்கும் போன்றவற்றை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

Read More : ’வேலைக்கு செல்லும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லையாம்’..!! ஏன் தெரியுமா..? வெளியான ஆய்வு முடிவுகள்..!!

English Summary

There is an additional obligation when going to worship a family deity.

Chella

Next Post

சொந்த வீடு கட்ட இருக்கீங்களா..? அப்படினா முதலில் இந்த விஷயத்தை பண்ணுங்க..!! நல்லதே நடக்கும்..!!

Sun Oct 6 , 2024
Keep the brick in the puja room of your house and worship it as Lord Muruga.

You May Like