fbpx

மக்களே..!! தமிழ்நாட்டில் இன்றும் (நவ.9) மின் கட்டணம் செலுத்தலாம்..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு மறுநாளான நவ.1ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் தங்கள் மின் கட்டணங்களை இன்று (நவ.9) செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை சார்பில் செயல்பட்டு வரும் மின்வாரியம் மூலம் வீடுகள், அலுவலகங்கள், பல்வேறு இடங்கள் மற்றும் விவசாய தேவைகளுக்காக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் சேவைகள் மற்றும் மின் நுகர்வுகளை பொறுத்து அதற்கான தொகை தமிழக மின்வாரியம் மூலம் அந்தந்த நபர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக தமிழக மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மற்றும் மின் கட்டண மையங்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை எப்போதும் விடுமுறையாக இருக்கும். ஆனால், தீபாவளிக்கு அடுத்த நாளான இம்மாதம் 1ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், அதை ஈடுசெய்யும் வகையில், வரும் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

எனவே பொதுமக்கள் தங்கள் மின் கட்டணங்களை இன்று சனிக்கிழமை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் நுகர்வோர் எண்ணிக்கை, 1 கோடி. இவர்களில், கட்டண மையங்களுக்கு நேரில் வருவோர் எண்ணிக்கை, 30 முதல் 40 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

English Summary

The Tamil Nadu Electricity Board has announced that the public can pay their electricity bills today (November 9).

Chella

Next Post

உங்கள் உடலில் மருக்கள் இருக்கா? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..

Sat Nov 9 , 2024
does-wart-resembles-any-health-issues

You May Like