விண்ணில் மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய நிகழ்வு ஒன்று இன்று நடைபெற இருக்கிறது. அதாவது, இன்று சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு தோன்ற உள்ளது. இந்த சூப்பர் ப்ளூ மூன் இன்னும் சற்று நேரத்தில், இரவு 9:36 மணிக்கு விண்ணில் நிகழும் என்றும் மேலும் இது நாளை காலை 4 மணி வரை வானில் காணலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட இன்று தோன்றும் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்படும்.இதனை நாம், வீட்டு மொட்டை மாடிக்கு சென்று சாதாரணமாக கண்களால் பார்க்க முடியும். வழக்கமாக தோன்றும் பௌர்ணமியை விடவும் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.
இந்த மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது பௌர்ணமியாக இது அமைகிறது. இம்மாத தொடக்கத்தில் நிலவு பௌர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிமீ தொலைவில் இருந்தது. நீல நிலவான இன்று இன்னும் பூமிக்கு பக்கத்தில் வந்து 3,57,244 கிமீ தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.
ப்ளூ மூன் என்றால், நிலா ப்ளு கலரில் இருக்கும் என்று அர்த்தமில்லை, நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பௌர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிமீ தூரத்திலும், சூப்பர் ப்ளூ மூன் தினத்தன்று 3,57,244 கிமீ தூரத்திலும் பூமியை வலம் வரும். இதுபோன்ற நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது.
கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ளூ மூன் தெரிந்தது. அதைத் தொடர்ந்து இன்று நிகழவுள்ளது. மேலும் இந்த வருடத்தில் மேலும் ஒருமுறை ப்ளூ மூன் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2024ஆகஸ்டில் சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வானில் தோன்றவுள்ள இந்த அரிய காட்சியை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்று நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் சென்னையில் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் இந்த சூப்பர் ப்ளூ மூன் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.