fbpx

மக்களே..!! கரண்ட் பில் கட்டிட்டீங்களா..? வந்தது புதிய மாற்றம்..!! மின்சார வாரியம் அதிரடி..!!

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

சமீபகாலமாகவே, கரண்ட் பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்திகள் எழுந்து வந்தது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தை கொண்டுவர அரசு முயன்று வருகிறது. மற்றொருபக்கம், கரண்ட் பில் குளறுபடிகளை போக்குவதற்காக, “புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை” இணைக்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு நடுவில் இன்னொரு வசதியை மின்வாரியம் செய்து தரப்போவதாக கூறினர். பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விவரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம். பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விவரம் நுகர்வோருக்கு, மெசேஜ் வாயிலாக அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விவரம் தெரிவிக்கவே, புது “மொபைல் செயலி” நடைமுறைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உங்கள் கரண்ட் பில் குறித்த அப்டேட் அடுத்த நொடியே உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடுமாம். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்னொரு வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, செல்போனில் மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டும் வசதியை மின்வாரியம் கொண்டுவந்துள்ளது.

வழக்கமாக கரண்ட் பில் கட்டுவதானால், நேரில் சென்று பணம் கட்டுவோம் அல்லது ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுவோம். ஆனால், இப்போது, மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டிவிடலாம். செல்போனுக்கு அதிகாரப்பூர்வமான மெசேஜ் வந்ததுமே, நீங்கள் மின்கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்திவிடலாம். அதாவது, உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் மெசேஜில் லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, அதனருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது கட்டணம் செலுத்தும் செயல்முறை ஆரம்பமாகும்.

கட்டணம் செலுத்தும் பக்கம் திறந்ததுமே, அதில் நீங்கள் எந்த வகை மின்கட்டணத்தை செலுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்து பிறகு, மின்கட்டணத்தை செலுத்திவிடலாம். இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோர் தங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து முடிந்துவிட்டால், கரண்ட் பில் கட்டுவது மேலும் எளிதாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

Chella

Next Post

’அது பரம ரகசியம்’..!! ’சரியான நேரத்தில் செக் வைப்பேன்’..!! ’எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு செல்வது உறுதி’..!! ஓபிஎஸ் அதிரடி..!!

Mon Jan 8 , 2024
எடப்பாடி பழனிசாமி விரைவில் திகார் ஜெயிலுக்கு செல்வார் என்று நான் பேசியது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது பரம ரகசியம். இருந்தாலும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் அதை சொல்வேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளராகும் வகையில் சட்ட விதிகள் வகுத்தார். ஆனால், அதனை தகர்த்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து பழனிசாமி […]

You May Like