fbpx

மக்களே..!! இன்று 18 மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக விருதுநகா், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திருப்பூா் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.15 லட்சம் வரை நிதி உதவி...! உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய புதிய தகவல்...!

Sat Dec 9 , 2023
நாட்டில் உடல் உறுப்பு தான விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் மற்றும் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் ஆகியவற்றின் தகவல்களை பரப்புவது இதில் அடங்கும். மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தை முற்றிலும் மீறும் […]

You May Like