fbpx

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது” – வைரலாகும் தங்கர் பச்சான் வீடியோ!

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது என்றும் ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது எனவும் இயக்குநர் தங்கர் பச்சான் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். இந்நிலையில், தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முந்திரி பழம் குறித்தும் அதில் உள்ள மகத்துவத்தை பற்றியும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு ஆளும் கட்சியையும் சாடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, முந்திரி பழம் மிகவும் உடலுக்கு நல்லது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை உலக நாடுகள் மருந்தாகவும் பானமாவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதனை இங்கு உள்ளவர்கள் தூக்கி எறிகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அறிவே இல்லை. இதற்கென்று ஒரு ஆலை தொடங்கி நமது பொருளாதாரத்தை உயர்த்தலாம். கட்சியில் அவரவர்களின் தேவைக்கேற்ப சாராய தொழிற்சாலையை உருவாக்கி பெண்களின் தாலியை தான் அறுக்கின்றனர் என்று ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி பேசினார்.

கடலூரில் தான் அதிக குடிசைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வரலாம். பண்ருட்டி விருதாச்சலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த முந்திரி பழம் அதிக விளைவதாகவும் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளதால் இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வந்தால் பொருளாதார ரீதியில் முன்னேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

ICC World T20 | உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிராகரிப்பு.!! அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!!

Tue Apr 30 , 2024
9-வது ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது . 20 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடர் வருகின்ற ஜூன் 2-ஆம் தேதி ஆரம்பமாகி 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய […]

You May Like