fbpx

மக்களே..!! உங்கள் ஆதார் எண் பத்திரமா இருக்க..? உடனே இதை பண்ணுங்க..!!

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள உறுதிப்படுத்தலுக்கு உதவுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கு இந்த தனித்துவமான அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இன்று ஆதாரை வைத்து பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே, ஒருவர் ஆதார் நம்பரை வழங்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை :

* உங்களது ஆதாரை கேட்கக்கூடிய நிறுவனமோ அல்லது நபரோ அதற்கான காரணத்தையும், உங்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டும்.

* ஒருவேளை உங்களது ஆதார் நம்பரை பகிர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், ஒரு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையரை (Virtual Identifier – VID) உருவாக்கி வழங்கக்கூடிய வசதியையும் வழங்குகிறது. ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த VID -ஐ நீங்கள் கொடுக்கலாம்.

* UIDAI வெப்சைட் அல்லது m-Aadhaar அப்ளிகேஷனில் கடந்த 6 மாதங்களுக்கான உங்களுடைய ஆதார் சம்பந்தப்பட்ட வரலாறுகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

* ஒவ்வொரு ஆதன்டிகேஷன் செயல்முறையையும் UIDAI உங்களுக்கு இ-மெயில் மூலமாக தெரியப்படுத்தும். எனவே, அப்டேட் செய்யப்பட்ட இ-மெயில் ஐடியை உங்களது ஆதார் எண்ணுடன் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* அடிப்படையிலான ஆதார் ஆதன்டிகேஷனை பயன்படுத்தி பல்வேறு விதமான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, உங்களது பயன்பாட்டில் உள்ள மொபைல் நம்பரையும் ஆதாருடன் தவறாமல் இணைத்து வைக்கவும்.

* ஆதார் லாக்கிங் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் போன்ற வசதியையும் UIDAI வழங்குகிறது. ஆதாரை பயன்படுத்தாத சமயத்தில் அதனை நீங்கள் பூட்டி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது உடனடியாக அதனை அன்லாக் செய்து பயன்படுத்தலாம்.

* ஒருவேளை உங்களது ஆதார் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கும் பொழுது உடனடியாக 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் UIDAI -ஐ தொடர்பு கொள்ளுங்கள். இது 24*7 மணி நேர இலவச அழைப்பு அல்லது help@uidai.gov.in என்ற இ-மெயில் ஐடியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

* உங்களுடைய ஆதார் லெட்டர் / PVC கார்டு அல்லது அதன் நகலை தவறுதலாக எங்கேயும் வைத்து விட வேண்டாம்.

* பொது தளங்களில் உங்களது ஆதார் எண்ணை ஷேர் செய்யாதீர்கள். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் உங்களது ஆதாரை பகிர வேண்டாம்.

* அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆதார் ஓடிபி பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* உங்களுடைய m-Aadhaar PIN -ஐ யாரிடமும் சொல்லக்கூடாது.

Chella

Next Post

விளையாட சென்ற 7 வயது சிறுமி.! கடுக்காய் வயலில் சடலமாக மீட்பு.! லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்.!

Mon Feb 12 , 2024
உத்திரபிரதேச மாநிலத்தில் ஏழு வயது சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் தொலைந்த மறுநாள் கடுகு பயிரிடப்பட்டுள்ள வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறந்த அந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஏழு வயது சிறுமி, சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில், […]

You May Like