fbpx

மக்களே..!! இந்த தவறை செய்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!

ஒவ்வொரு கிழமைக்கும் தனித்தனியே விசேஷம் உண்டு. ஆகாத கிழமை, நாள், நட்சத்திரம், திதி என்று எதுவுமே கிடையாது. அஷ்டமி, நவமி சரியில்லை என்று புலம்புகிற நாம் தான் ராமி நவமியையும், கோகுலாஷ்டமியையும் கொண்டாடுகிறோம். ஆனால், ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு சக்தி உள்ளது. பொதுவாகவே வெள்ளிக்கிழமை பணவரவுக்கு ஏற்ற நாள். செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.

நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைபிடித்து வர வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள். அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். அதாவது, வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. அதே போல் வெள்ளிக்கிழமைகளில் யாரிடமும் சென்று கடன் கேட்டும் நிற்காதீர்கள். உங்களுக்கு வரவேண்டிய செல்வம், வரவாகவே இருக்கட்டும். கடனாக இருக்க வேண்டாம்.

வெள்ளிக்கிழமைகளில் அரிசியை வறுப்பதும், புடைப்பதும் கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளக் கூடாது. பச்சரிசியில் லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது. வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு குப்பையை வெளியே வீசக் கூடாது. காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது. பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைபிடிக்கலாம். குறிப்பாக, துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.

தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்க வேண்டாம். இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

Read More : ”சார் என்ன விட்ருங்க”..!! கெஞ்சிய மாணவி..!! விடாத உடற்கல்வி ஆசிரியர்..!! கூண்டோடு மாற்றம் செய்து நடவடிக்கை..!!

English Summary

Our Shastra lays down some basic things that should not be forgotten on Fridays. If you have been doing all this till now without knowing it, it may have been a hindrance to your growth all this time.

Chella

Next Post

புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் இதோ!!

Mon Jul 1 , 2024
In order to completely eliminate counterfeit liquor, an amendment has been brought to impose severe penalties on those who manufacture and sell it, with rigorous imprisonment for life and a fine of up to 10 lakh rupees.

You May Like