fbpx

மக்களே..!! அதிக மழை பெய்யும் போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! பரிதாபமாக இறந்த பள்ளி சிறுமி..!!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே, இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவர் இடிந்து விழுந்து 4ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஷா மற்றும் அவரது அண்ணன் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி மோனிஷா (9) உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அண்ணனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள சுவர் அருகே நிற்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Chella

Next Post

"ஹேப்பி அண்ணாச்சி.." மொத்த சிட்டிக்கும் ஒத்த டிக்கெட் போதும்.! மெட்ரோ முதல் சிட்டி பஸ் வரை! அரசின் அசத்தலான திட்டம்.!

Mon Jan 8 , 2024
வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகின்றனர். நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் பொருட்டு மெட்ரோ […]

You May Like