ரூ. 2,000 மேல் கேக் வாங்கினால் ஆவின் வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அமர்ந்து சாப்பிடும் வசதிகளையும் செய்துள்ளது. இந்நிலையில், சென்னையில் முக்கிய ஆவின் பாலகங்களில் 2,000 ரூபாய்க்கு மேல் கேக் வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் வாங்கினால் அந்த வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாட அனுமதிக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி அம்பத்தூர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட ஆவின் பாலகங்களில் வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய்க்கு மேல் கேக் வாங்கி அதே வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.