கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் தங்கள் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, சென்னையில் உள்ள பொதுமக்கள் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது
அதன் படி, மதியம் 11 முதல் 3 மணி வரை நேரடி வெயில் படும் திறந்த வெளியை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ORS மற்றும் எலுமிச்சை சாறு, நீர்மோர்,லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.