fbpx

வடசென்னை மக்களே..!! முக்கிய வழித்தடங்களில் இன்று மின்சார ரயில்கள் ரத்து..!! இந்த டைம் நோட் பண்ணிக்கோங்க..!!

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று (பிப்.27) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், ”கவரைப்பேட்டை – பொன்னேரி இடையே இன்றும், மார்ச் 1ஆம் தேதியும் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.05, 8.35, 9.00, 9.30, 10.15, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40-க்கு புறப்படும் மின்சார ரயில்களும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 10.55, 11.25, 12.00, 1.00, 2.30 மணிக்கு புறப்படும் ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சேவை, சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மதியம் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இந்நிலையில், மின்சார ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9.00, 9.40, 11.35-க்கும், மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, மதியம் 12.18, 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, சென்னை சென்ட்ரல் – மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும், எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமார்க்கமாக மீஞ்சூரில் இருந்து காலை 11.56-க்கும், எண்ணூரில் இருந்து மதியம் 1.43 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Read More : இலவச ரேஷன் அரிசி வேண்டுமா..? அப்படினா இந்த வேலையை உடனே முடிங்க..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

English Summary

It has been announced that electric trains running from Chennai Central and Chennai Beach to Gummidipoondi will be cancelled today (Feb. 27).

Chella

Next Post

அசத்தல் திட்டம்...! 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசு...!

Thu Feb 27 , 2025
Tamil Nadu government to provide subsidy of up to Rs. 2 lakh to people between the ages of 18 and 40

You May Like