சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்றும் அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்.17ஆம் தேதி பணி நாளாக செயல்படும். மேலும், கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 9ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வருகிற செப்.2ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.