fbpx

அரிசி விலை அதிரடி உயர்வு..!! என்ன காரணம்..? எவ்வளவு..?

தமிழ்நாட்டில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காய்கறிகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்த நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கிச் செல்வதால் விலை உயர்ந்து காணப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு, அறுவடை நேரத்தில் பலத்த காற்று வீசியது மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதுவும் அரிசி விலை உயர ஒரு காரணம் எனவும் அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

குட் நியூஸ்: மதிய உணவுத் திட்டம்..!! கூடுதல் நிதி ரூ.4,114 கோடி வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்.!

Wed Jan 31 , 2024
தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகளும் கல்வி பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குழந்தைகள் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல நடந்துள்ளனர். மதிய உணவுத் […]

You May Like