fbpx

’இந்த 16 மாவட்ட மக்களும் கொஞ்சம் உஷாரா இருங்க’..!! வானிலை மையம் கொடுத்த வார்னிங்..!!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

’ஃபிரண்டுனு கூட பாக்கலையே’..!! விசித்ராவை விளாசித் தள்ளும் வனிதா விஜயகுமார்..!!

Mon Oct 9 , 2023
பிக்பாஸ் 7இல் தினமும் ஒரு டாஸ்க் வைத்து பல சண்டைகள் வருவதால், வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. அதில், ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா கட்டிப்போட்டார். இதுதொடர்பாக கமல்ஹாசனும் நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில், இதுகுறித்து ஜோதிகாவின் அம்மாவும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் […]

You May Like