fbpx

’இந்த மாவட்ட மக்கள் இன்னைக்கு உஷாரா இருங்க’..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய வார்னிங்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைகாற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதனால், இன்று (ஜூலை 3) தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 4, 5, 6ஆம் தேதிகளில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதேபோல, இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 4-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 5-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chella

Next Post

இனி லோன் கேட்டு வங்கிக்கு அலைய வேண்டாம்……! எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…..!

Mon Jul 3 , 2023
எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில், தற்சமயம் யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்திருக்கிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன் செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதியுடன் அறிமுகம் செய்திருக்கிறது இதில் யு.பி.ஐ பரிவர்த்தனை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. யு.பி.ஐயின் மூலமாக அடுத்தவர்களுக்கு பணத்தை அனுப்ப ஸ்கேன் செய்து […]

You May Like