fbpx

மக்களே..!! இந்த மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாகவே வட தமிழக கடலோர பகுதிகளை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து நாளை காலை 5.30 மணிக்கு மேல் தீவிர பியலாக நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது. எனவே, இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குரூப் 2 தேர்வு முடிவுகள்..!! டிசம்பர் 5, 8..? டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் வெளியிட்ட புதிய தகவல்..!!

Mon Dec 4 , 2023
தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதல் நிலை தேர்வு 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 57,641 நபர்களில் முதன்மைத் தேர்வுக்கு 55,071 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற […]

You May Like