fbpx

மக்களே ரெடியா..? இன்று முதல் தமிழ்நாடு முழுவதும்..!! ஆரஞ்ச் அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு ஆகியவை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, திருவள்ளூர், கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நாளை (திங்கட் கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை மறுதினம் (செவ்வாய் கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இனி இதற்கு ஆதார் கட்டாயமில்லை…..! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Sun Jul 2 , 2023
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]

You May Like