fbpx

மக்களே..!! 6-வது சுற்று பருவமழைக்கு ரெடியா..? தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் 6-வது சுற்று மழை தொடங்கப்போவதாகவும், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “27ஆம் தேதி வரை 6ஆம் சுற்று வடகிழக்கு பருவமழை, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் சற்றே கனமழை முதல் கனமழையை கொடுக்கும். டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை வரை கொடுக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் அதித கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (டிசம்பர் 25) முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வரும் 29ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கிறிஸ்துமஸ்க்கு விழா... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல முடியாது..! இது தான் திராவிடம் மாடல்..

Mon Dec 25 , 2023
கிறிஸ்துமஸ் விழாவை நடத்தும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிடம் மாடல் என பாஜக எம்எல்ஏ வானதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “நடப்பது கிறிஸ்துமஸ் விழா. நடத்துவது இந்து சமய அறநிலையத் துறை […]

You May Like