fbpx

மக்களே..!! இன்று முதல் ரயில் நிலையங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்..!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2000 புதிய நோட்டை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் பார்சல் சேவை உள்ளிட்ட ரயில் சேவைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் பேருந்துகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது ரயில் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த தடையும் இல்லை என்றும் விதிகளை மீறி பணத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தபால் அலுவலகங்களில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Tue May 23 , 2023
நாடு முழுவதும் பல்வேறு தபால் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர்: போஸ்ட் மாஸ்டர், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் காலி பணியிடங்கள்: 12,828 கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக கணிதம், ஆங்கிலம் […]

You May Like