fbpx

’மக்களே மீண்டும் லாக்டவுன் வரப்போகுது’..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு அனுப்பும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் மூலம் கொரோனாவின வகைகளை கண்டறிய முடியும். இதனை அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

’மக்களே மீண்டும் லாக்டவுன் வரப்போகுது’..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

மேலும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

வட இந்தியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சென்னை இளைஞர்..! திடுக்கிடும் தகவலை கூறிய பெற்றோர்கள்...

Wed Dec 21 , 2022
சென்னை சின்னமலை வெங்கடாபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சயின்ஷா, பி ஏ பட்டதாரியான யோவர் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள விளையாட்டு திடலுக்கு கால்பந்து விளையாட சென்றுருக்கிறார், வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் இவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு திடல் அருகில் இருக்கக்கூடிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தாக்கப்பட்டு இருப்பதாக அறிந்து, அவரது […]

You May Like