மிசோரம் மாநில பகுதியில் விமான தளம் அருகே, சென்ற அக்டோபர் 29 ஆம் நாள் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அருகில் உள்ள மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துள்ளனர். இந்த நிலையில் யாவரும் எதிர்பாரத விதமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் , பெட்ரோலை பிடிக்க வந்த பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதனையடுத்து, விசாரணை செய்த போது டேங்கர் லாரி மத்தியில் ஒருவர் சிகரெட் லைட்டரை பற்ற வைத்து தான் தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது என தெரிய வந்ததுள்ளது. மேலும், அந்த நபரை உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவரை கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.