fbpx

5000 ஆண்டுகளுக்கு முன்பே ஃபிரிட்ஜ் பயன்படுத்திய மக்கள்!… மிச்ச மீதி உணவுகளும் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! எங்கு தெரியுமா?

ஈராக் மக்கள் பயன்படுத்திய 5000 ஆண்டுகள் பழமையான ஃபிரிட்ஜ் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த மிச்ச மீதி உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இத்தாலியைச் சேர்ந்த பிசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து ஈரானில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர் அப்போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு உணவகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்பு அன்றைய சாதாரண அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது இந்த கண்டுபிடிப்பில் அன்றைய மக்கள் உபயோகப்படுத்திய குளிர்சாதனப் பெட்டி மற்றும் உணவு உண்ணும் இடம், மிச்ச மீதி பொருட்கள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது.

இந்த உணவு உண்ணும் இடம், சுமேரிய நாகரிகத்தின் முக்கிய மையமாக இருந்த பண்டைய லாகேஷ் இடிபாடுகளில் ஒன்றாகும். மேலும், அந்த இடம் பெஞ்சுகள், அடுப்பு மற்றும் ‘ஜீர்’ எனப்படும் களிமண் குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றால் நிரப்பப்பட்டது. எஞ்சிய உணவு மற்றும் பிற பாத்திரங்களுடன் சில கிண்ணங்களும் இருந்தன. சில கிண்ணங்களில் விலங்குகள் மற்றும் மீன்களின் எலும்புகள் இருந்தன. அதோடு மட்டுமல்லாமல் அங்கு பீர் குடிக்கும் பரவலான சுமேரிய பாரம்பரியமும் இருந்ததாக தெரிகிறது. ஜீர் எனப்படும் பண்டைய குளிர்பதன அமைப்பு, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈரப்பதம்-விக் அமைப்பாகும், இது உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சரியாக குளிரூட்டல் இல்லை என்றாலும், உணவுப் பாதுகாப்பில் இந்த அமைப்பு உதவியாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Kokila

Next Post

சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைந்த இதயத்தை சரிசெய்யும்!... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!... முழுவிவரம் இதோ!

Tue Feb 28 , 2023
பாதிப்படைந்து வடுக்களாக மாறும் மனிதர்களின் இதய செல்களை, சருமத்தில் உள்ள செல்களை கொண்டு சீரமைக்கலாம் என்பதை கௌஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் 30 வயது இளைஞர்களும் இதய சார்ந்த பல்வேறு நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதயத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். ஆனால், விலங்குகளில் பழுதடைந்த இதய செல்கள் மீண்டும் வளர்ச்சி அடைகின்றன. ஆனால், மனிதர்களுக்கு […]

You May Like