fbpx

மக்களே..!! பொங்கலுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!! மாஸ் அறிவிப்பை வெளியிடும் தமிழ்நாடு அரசு..!!

பொதுமக்களின் நன்மைக்காக ஏராளமான அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகள் அனைத்து ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போவதால், இதற்கான பரிசு தொகுப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாத துவக்கத்தில் இருந்தே இதுகுறித்த தகவல்கள் கசிந்தபடி உள்ளன.

இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் கூடிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம். அதாவது, மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் ஆங்காங்கே அதிருப்தி நிலவுவதாலும், எம்பி தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக ,2000 ரூபாய் வழங்கலாமா? என்றும் அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆனால், திடீரென மிக்ஜாம் புயலால் 4 மாவட்டங்களில் பாதிப்பை தந்துவிடவும், நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. நிவாரண தொகை வழங்கி வரும் நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், அடுத்ததாக தென்மாவட்டங்களை மழை புரட்டி போட்டுவிட்டது. ஆக, மழை, வெள்ளத்தால் மொத்தம் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகிறதாம்.

அதாவது, ரொக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எப்படியும், தென்மாவட்ட மழை பாதிப்புகளை, முதல்வர் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நிவாரணத் தொகை, பொங்கல் தொகுப்பு என பொதுமக்களுக்கு தரப்படும் பணப்பலன்களை, வங்கிகள் மூலமாகவே தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

200 ரூபாய்க்காக 15 வயது மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை.! யோகி ஆளும் உபியில் நடந்த கொடுமை.!

Fri Dec 22 , 2023
கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக 15 வயது மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஆறு இளைஞர்களை தேடி வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனுக்கு 200 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறான். கடன் வாங்கிய […]

You May Like