fbpx

மின் மாற்றியை தோளில் சுமந்து மலை ஏறிய மக்கள். என்ன காரணம்?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2016ல் இங்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் மின்மாற்றியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அம்மக்கள் தவித்தனர்.

புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த போது பழுதடைந்த மின் மாற்றியை மலைப்பகுதியில் இருந்து கீழே இறக்கி வருமாறு மக்களுக்கு அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மக்கள், மின் மாற்றியை தோள் சுமையாக மலையில் இருந்து கீழ் இறக்கியுள்ளனர்.

தொடர்ந்து அடிவாரத்தில் வைக்கப்பட்ட பழைய மின்மாற்றியை கொண்டு சென்ற மின்வாரிய ஊழியர்கள், அலுவலகத்தில் அதை ஒப்படைத்துள்ளனர். அதன்பின் புது மின்மாற்றியை கடந்த 20ம் தேதி போதமலை அடிவாரத்தில் வைத்துள்ளனர். மின்மாற்றி வைத்து 15 நாட்கள் ஆன பின்னும்கூட, அதை மலைப்பகுதிக்கு அவர்கள் எடுத்த செல்ல முடியாத நிலையே நீடித்துள்ளது.

இதனால் சுமார் 800 கிலோ எடை கொண்ட அந்த மின்மாற்றியை, மலைவாழ் மக்கள் தாங்களே முழுமையான பாதுகாப்புடன் மீண்டும் மலைப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் தோள் சுமையாக மின்மாற்றியை தூக்கிச்சென்ற காட்சி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Maha

Next Post

அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம்..!! யாருடன் தெரியுமா..?

Thu Jul 6 , 2023
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் ஹீரோயினாக குறுகிய காலம் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த காலகட்டத்தில் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. குறிப்பாக, விஜய்யுடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அஜித்துக்கு ஜோடியாக நடித்த அமர்க்களம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. நடிகை ஷாலினியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது அமர்க்களம் […]
அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம்..!! யாருடன் தெரியுமா..?

You May Like