உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இருக்கும் இருந்திருக்கும் இதை யாராலும் மறுக்க முடியாது. இதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கண்டால், நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தரும்.
அதிலும் இன்னும் திரைபடங்களில் வரக்கூடியமிகவும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியின மக்கள் பின்பற்றி தான் வருகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் பின்பற்றும் விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி நாம் காணுவோம்.
இவர்கள் மலாவி பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்த பின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின் அந்த நீரில் சமையல் செய்து உண்கின்றனர். ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இது ஓர் வித்தியாசமான திருமண சடங்கு, அதில் அவனை அவ்வினத்தை சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடிக்கின்றனர். இதில் மணமகனின் ஆண்மை சோதிக்கப்படுகிறது. அந்த வலியைத் தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்.. இல்லையெனில் மணமகள் கிடையாது. சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து வரும் உடாப் பழங்குடியினர், இரவில் கிரிவோல் என்ற நடன திருவிழாவை நடத்துகின்றனர். இதில் எந்த ஒரு விசித்திரமும் இல்லா விட்டாலும், அச்சமயத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அது திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, உடாப் ஆண்மகன் தூக்கி சென்று குடும்பம் நடத்தலாம். எத்தியோப்பியாவின் ஹாமர் பழங்குடியினரைச் சேர்ந்த ஆண்கள், தங்களது ஆண்மையை நிரூபிக்க, காளைகளை வரிசையாக நிற்க வைத்து, அதன் மீது ஏறி ஆடையின்றி ஓடி, குதிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பிய பகுதியில் வாழ்ந்து வரும் சுர்மா பழங்குடியின பெண்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இந்த பழங்குடியின பெண்கள் பூப்படையும் போது, கீழ் உதட்டில் மூலிகைப் பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகடு ஒன்றை பொருத்தப்படும். இது நமக்கு பயங்கரமாக காணப்பட்டாலும், அப்பெண்கள் அதை அழகாக கருதுகின்றனர்.