fbpx

கைரேகை, கருவிழிகள் பதிவு இல்லாதவர்களும் ஆதார் பெறமுடியும்!… எப்படி தெரியுமா?

“ஜோசிமோல் பி ஜோஸ் போன்றவர்களுக்கும் மங்கலான கைரேகைகள் அல்லது பிற குறைபாடு உள்ளவர்களுக்கும் மாற்று பயோமெட்ரிக் மூலம் ஆதார் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஆலோசனை அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஆதார் ஆணையம் சிலருக்கு பயோமெட்ரிக் பதிவு செய்வதில் இருந்து விதிவிலக்கு வழங்குகிறது. முதுமை அல்லது தொழுநோய் காரணமாக வெட்டு, காயம், கட்டு, காய்த்துப் போன அல்லது வளைந்த விரல்கள் இருந்தால் கைரேகை பதிவு செய்யத் தேவையில்லை. கருவிழிகள் பதிவுசெய்ய முடியாத சூழலிலும் விதிவிலக்கு வழங்கப்படும்.

கைரேகைகளை பதிவுசெய்ய முடியாதவர் கருவிழி ஸ்கேன் மட்டும் செய்து ஆதார் பெறலாம். இதேபோல், கருவிழிகளை ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றால், கைரேகையை மட்டும் பயன்படுத்த ஆதார் பெறலாம். கைரேகை மற்றும் கருவிழி இரண்டையும் வழங்க முடியாத நபர் இரண்டும் இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம். அத்தகைய நபர்களுக்கு, பயோமெட்ரிக் விதிவிலக்கு பதிவு வழிகாட்டுதல்களின் கீழ், பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி / பிறந்த ஆண்டு ஆகிய தகவல்களுடன் ஆதார் அட்டை வழங்கப்படும்.

Kokila

Next Post

அடிக்கடி பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா?… எச்சரிக்கும் புதிய ஆய்வு!

Fri Dec 22 , 2023
உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் வலி, தலைவலி, கீழ் முதுகுப் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில், ஒரு நபர் நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்காருவது கடினம். வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற, மக்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் மற்றும் கோடீன் போன்ற மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்கிறார்கள். அத்தகைய மருந்துகளின் பயன்பாட்டிற்கு எதிராக ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. யோசிக்காமல் மெடிக்கல் ஸ்டோர்களுக்குச் சென்று […]

You May Like