fbpx

ரூ.2000 நோட்டுகளை Zomato-வில் கொட்டிய மக்கள்..!! விரக்தியில் ட்விட்டரில் போட்ட பதிவு வைரல்..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கெண்டுவந்தது. அதன்படி, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனால், பெரும்பலமான மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, சமூக ஊடக தளங்கள் மீம்களால் வெள்ளத்தில் மூழ்கின. அந்த வகையில், மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை எளிதாக செலவிட ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.

Zomato-வில் உணவை ஆர்டர் செய்து மக்கள் தங்களின் ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். பலரும் இதை செய்ததை அறிந்த Zomato நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ‘வெள்ளிக்கிழமை முதல், எங்களின் டெலிவரி ஆர்டர்களில் 72% பணம் 2000 நோட்டுகளால் செலுத்தப்பட்டது’ என்று பதிவிட்டுள்ளது. மிகவும் பிரபலமான ‘பிரேக்கிங் பேட்’ வெப் தொடரில் வரும் பிரபல கதாபாத்திரம் Zomato tshirt அணிந்து, 2000 ரூபாய் நோட்டுகள் கொண்ட படுக்கையில் தூங்கும் டெம்ப்ளேட்டை பதிவிட்டுள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://twitter.com/zomato/status/1660530725299314693?s=20

Chella

Next Post

ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி….! கன்னியாகுமரி அருகே பரபரப்பு…..!

Tue May 23 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 32 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு முடித்திருக்கிறார் இந்த நிலையில் அந்த மாணவி 18 வயது நிறைவடைந்து தற்போது 19 வயதை அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவி தோழி ஒருவரை பார்த்து […]

You May Like