fbpx

பறவையின் எச்சில் சூப் தயாரித்து பருகும் மக்கள்!. ஏன் தெரியுமா?. சீன மருத்துவ குறிப்பில் இத்தனை ரகசியங்கள் இருக்கா?

Bird’s saliva soup: பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பில் உள்ள நன்மைகள் குறித்து சீன மருத்துவக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். அதாவது இந்த பறவையின் எச்சம் நிறைந்த சூப் சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும், இது குறித்து சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள உலர்ந்த பறவை கூடின் விலை, 500 கிராம் ₹1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பழமையானதாகவும் சுவையானதாகவும் கருதப்படும் பறவை கூடு சூப் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது. இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் சமீபத்தில், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ளது. மலேசியா, தாய்லாந்து போன்ற பல இடங்களில், மக்கள் தங்கள் கூடுகளை சேகரிக்க ஸ்விப்லெட் பண்ணையை ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக வருவாய் கிடைப்பதால், காலி வீடுகளை ஸ்விஃப்ட்லெட் வீடுகளாகப் மாற்றி பண்ணையாக பயன்படுத்துகின்றன.

பறவைக்கூடு சூப் (Bird’s Nest Soup) என்பது சீன பாரம்பரிய உணவாகும். இதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் பறவைக்கூடு. இதை சுவையூட்ட சிக்கன் ப்ரோத் மற்றும் கடல் உணவுகளுடன் சேர்த்து சமைக்கின்றனர். இதில், சிறப்பான சுவையும் மருத்துவ பலன்களும் உள்ளன என்று நம்பப்படுகிறது. ஆசிய நாட்டின் பறவையின் எச்சில் நிறைந்த அந்த கூட்டில் கிளைகோபுரோட்டின்கள், கொலாஜன், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாகவும், சுருக்கங்களைக் குறைப்பதாகவும், இளமைத் தோற்றத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பறவையின் கூடு நீண்டகாலமாக பயன்படுத்தப்படுவது அதன் நவீன தோல் பராமரிப்பு பயன்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

Readmore: 3 ஆண்டுகளுக்குப் பிறகு பயனரின் தரவை நீக்க வேண்டும்!. ஈ-காமர்ஸ், கேமிங், சமூக ஊடக நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நிபந்தனை!. புதிய தரவு விதிகள் அமல்!.

English Summary

People who prepare and drink bird’s saliva soup! Do you know why? Are there so many secrets in Chinese medicine?

Kokila

Next Post

Ind vs Aus| சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி!. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை இழந்தது!. ரசிகர்கள் சோகம்!.

Sun Jan 5 , 2025
Indian team defeat in Sydney Test! World Test Championship Final Chance Missed!. Sad fans!

You May Like