மொபைல் போன் என்பது தற்போது பலர் வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும்பாலானவையை மொபைல் போனை பயன்படுத்தி செய்ய முடியும். பிடித்தவர்களிடம் பேசுவது முதல் பண பரிவர்த்தனை வரை மொபைல் போன்கள் உதவுகின்றன.
சமீபகாலமாக, பலர் தங்கள் பணத்தை அவர்களுடைய மொபைல் பின்புறத்தில் வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மக்கள் தங்கள் தொலைபேசியின் பின்புறத்தில் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். அந்த நோட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் யாரும் திருட முடியாது. ஆனால் சமீபத்தில், போன் வெப்பத்தால் நோட்டு எரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், தொலைபேசியின் பின்புறத்தில் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது ஆபத்தானது, ஏனெனில் அது தீப்பிடித்து தொலைபேசிக்கும் பயனருக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஒரு பெண் விளக்குவதைக் காணலாம். மேலும் அந்த வீடியோவில், செயலியின் வேகம் தொலைபேசியை வெப்பமாக்குகிறது, இது பின்புறத்தில் வைத்திருக்கும் நோட்டை எரிக்கக்கூடும் என்று விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரூபாய் நோட்டுகள் காகிதம் மற்றும் பல்வேறு இரசாயனங்களால் உருவாக்கப்படுகிறது, இது மொபைல் சூடாகும் போது எளிதில் தீப்பிடித்து, முழு தொலைபேசியையும் சேதப்படுத்தும். இது பயனருக்கு பல சேதங்களை ஏற்படுத்தும், இது தொலைபேசி மட்டுமில்லாமல் பயனர்களுக்கும் ஆபத்தானது, இதனால் நிறைய காயங்கள் ஏற்படலாம். நோட்டு எரிந்ததில் சேதமடைந்த போன் முற்றிலும் சிதைந்து எரிந்த புகைப்படங்களும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.