fbpx

”விடியல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்”..! டிடிவி தினகரன்

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுங்கள்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும். எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வந்த பின் பேசலாம். அதிமுகவில் 2 பேரும் நிர்வாகிகளை நீக்குவது மாற்றுவது பற்றி அந்த கட்சி தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என நகைச்சுவையாக பேசிய அவர், ஒரு காலத்தில் தான் அதிமுகவில் இருந்தேன் என தெரிவித்தார்.

”விடியல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்”..! டிடிவி தினகரன்

’அப்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்’ என்று தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், கடலில் பேனாவை நட்டு வைப்பதை இப்போது தான் பார்க்கிறோம். இது போன்ற வெற்று விளம்பரங்களால் தான் திமுகவை மக்கள் ஆட்சி பொறுப்பில் இருந்து இறக்குவார்கள். கடந்த எடப்பாடி அண்ணன் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால் விடியல் ஆட்சி வந்தது. விடியல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். மின் கட்டணம் உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்வதை விட்டு தமிழக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் திரும்ப பெற வேண்டும். கடன் வேண்டாம் என்று சொல்லி விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை காண வேண்டும்” என தெரிவித்தார்.

Chella

Next Post

ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு..? வெளியான பரபரப்பு தகவல்..!

Mon Jul 25 , 2022
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்துக் கடந்த 23ஆம் […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like