fbpx

இந்த நோய்கள் இருப்பவர்கள் வயாகரா மாத்திரையை கட்டாயம் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது..!! உயிருக்கே ஆபத்து..!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பல ஆண்கள் உடலுறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க மாத்திரைகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஆனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் போது மோசமாக பின் விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. மேலும் ஒரு சில நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் வயாகரா மாத்திரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன நோய்கள் என்பதையும், வயாகரா மாத்திரையின் செயல்பாடுகள் குறித்தும் பார்க்கலாம்?

வயாகரா சாப்பிட்டவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: உடலுறவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வயாகரா மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி செய்யும்போது வயாகரா மாத்திரை உடலில் இரத்தநாளங்களை விரிவு படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. பின்பு ஆண்குறியிலும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி விறைப்பு தன்மையை நீண்ட நேரம் நிலைத்து நிற்க செய்கிற செய்கிறது.

யார் வயோகரா சாப்பிட கூடாது..?

1.  மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வயகரா எடுத்துக் கொள்ளும் போது அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு நிகழ்கிறது.

2.  முதன்முதலில் வயதானவர்கள் வயாகரா மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போது  மிகவும் குறைவான அளவையே (25mg) எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வயதானவர்கள் அதிக அளவில் வயகரா எடுத்துக் கொள்ளும் போது உடலில் தோல்கள் சிவப்பு நிறத்தில் மாறி அலர்ஜியாகும். மூக்கில் ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு மற்றும் கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனாலேயே மாரடைப்பும் ஏற்படுவதுண்டு.

3. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வயகரா மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மிகப்பெரும் பின்விளைவை ஏற்படுத்தும்.

4. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நோய்க்கான மருந்துடன் வயாகரா மாத்திரையையும் எடுத்துக் கொள்ள கூடாது. இதனால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை செயலிழக்கும் அபாயம் அதிகம்.

5. வயகரா மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது அது உடலில் கலந்து சிறிது நேரம் கண் மங்கலாக தெரிய வாய்ப்புண்டு. எனவே, முன்னதாகவே கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது மீறி எடுத்துக் கொண்டால் கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Read More : ’ஏப்ரல் 21ஆம் தேதி வரை தான் டைம்’..!! மொத்த கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

English Summary

Taking Viagra without a doctor’s advice can cause high blood pressure and heart attacks.

Chella

Next Post

இந்தோனேஷியாவில் வன்முறை!. நாடாளுமன்றத்தை சூரையாடிய மாணவர்கள்!. என்ன நடந்தது?

Fri Mar 28 , 2025
Attack again in Kathua! 3 policemen martyred! 2 terrorists shot dead!

You May Like