பூண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டின் நன்மைகள் உள்ளன.
பூண்டின் நண்மைகள்: இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுகிறது, புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,
பூண்டு நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், பூண்டு, பல நோய்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கிறது. சில நோய்களில் பூண்டு உட்கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டு உட்கொள்ளக் கூடாது.
வயிற்றுப் பிரச்சினை ஏதேனும் இருந்தால், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.. குறைந்த இரத்த அழுத்த பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டு உதவுகிறது. இது குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்
ஆரோக்கியமான உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இரத்தத்தில் குறைந்த அளவு ஹீமோகுளோபின் உள்ளவர்கள் பூண்டு உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்த சோகையை ஏற்படுத்தும். கல்லீரல் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், பூண்டு உட்கொள்ளக்கூடாது. இதனால் கல்லீரல் முற்றிலுமாக சேதமடைகிறது.